கிடங்கில் பெண்ணைக் கட்டிவைத்த ஆடவருக்குச் சிறை

1 mins read
70980489-b9d5-4f46-849e-406ba12c568e
வூ செய்த இந்தக் குற்றத்திற்கு 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சூதாட்டத்தில் ஏற்பட்ட 25,000 வெள்ளி கடனை அடைக்க ஆடவர் ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

வூ ஸிபிங் என்னும் 36 வயது ஆடவர் தமது நண்பர் லின் மெய்யிடம், 42, கடன் வாங்கியிருந்தார். கடனை அடைக்காததால் லின்னுக்கு உதவ வூ ஒப்புக்கொண்டார்.

லின்னிடம் கடன் வாங்கிய பெண் ஒருவர் அதைத் திருப்பிக் கொடுக்காமலிருந்தார். அந்தத் தொகையை வாங்க வூ மற்றும் லின் அந்தப் பெண்ணைக் கிடங்கில் வைத்து அடைத்தனர்.

கிடங்கில் அந்தப் பெண்ணின் கண்கள் துணியால் கட்டப்பட்டன. மேலும் அந்தப் பெண் ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு கைகால்களில் கயிறு கட்டப்பட்டிருந்தது.

கிடங்கில் அடைக்கப்பட்ட பெண் சிங்கப்பூரர் என்றும் அவர் 25,000 வெள்ளி கடன் வாங்கியதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அதிகாலை ஜூரோங் வட்டாரத்தில் நடந்தது.

கிட்டத்தட்ட அந்தப் பெண் ஐந்து மணி நேரம் கட்டிவைக்கப்பட்டார். அதன்பின்னர் தமது நண்பர் ஒருவர் மூலம் அப்பெண் பணம் தருவதாக தெரிவித்த பிறகு விடுவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அப்பெண் காவல்துறையில் புகார் கொடுத்தார். அதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வூ செய்த இந்தக் குற்றத்திற்கு 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லின் தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வூ சீனாவைச் சேர்ந்தவர் என்றும் லின் தைவானைச் சேர்ந்தவர் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்