தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாவாடைக்குள் படமெடுத்த ஆடவருக்குச் சிறை

2 mins read
c8185e4c-5f4b-4a81-a1d1-0a956a7d3ef6
160க்கும் அதிகமான முறையற்ற படங்களையும் காணொளிகளையும் 37 வயது எட்மண்ட் குவேக் லீவென் எடுத்தார். - படம்: பிக்சாபே

2019ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாவாடைக்குள் படமெடுக்கும் குற்றத்தில் ஈடுபட்ட ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

160க்கும் அதிகமான முறையற்ற படங்களையும் காணொளிகளையும் 37 வயது எட்மண்ட் குவேக் லீவென் எடுத்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 27 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒருமுறை அவரைப் பெண் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்தபோதும்கூட இக்குற்றச் செயலை அவர் தொடர்ந்ததை அரசாங்க வழக்கறிஞர் சுட்டினார்.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குவோகோ டவரில் அப்பெண்ணின் பாவாடைக்குள் குவேக் காணொளி எடுத்தார்.

பிடிபட்ட குவேக்கின் கைப்பேசியில் மேலும் பல தகாத படங்கள் காணொளிகள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பான விசாரணை நடந்துகொண்டிருந்தபோது 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதியன்று குவேக் மீண்டும் பாவாடைக்குள் படமெடுக்கும் குற்றத்தில் ஈடுபட்டார்.

இம்முறை ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ நீச்சல் வளாகத்தில் நீச்சல் உடையில் இருந்த பெண்களை அவர் படமும் காணொளியும் எடுத்தார்.

நீச்சல் வளாக ஊழியர்கள் காவல்துறையை அழைத்தனர்.

குவேக்கின் கைப்பேசியில் மேலும் பல தகாத படங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மனநலப் பரிசோதனை நடத்தப்பட்டதில் குவேக்கிற்கு மிகக் கடுமையான மனஅழுத்தக் குறைபாடு இருப்பது தெரியவந்தது.

ஆனால், இது அவரது குற்றச் செயல்களுக்குக் காரணமல்ல என்று மனநலக் கழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டிலிருந்து கேமரா இல்லாத கைப்பேசியை குவேக் பயன்படுத்தி வருவதாக அவரது வழக்கறிஞரான திரு வில்சன் இயோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குவேக், தம்மால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்