மதுபோதையில் இருந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆடவர்களுக்குச் சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட்டன.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று அட்மிரால்டி பூங்காவில் உள்ள கழிவறையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள்.
சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக 22 வயது முகம்மது இஸ்னாலி டேவிட்டுக்கு பன்னிரண்டரை ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
இவர் சிறுமியைப் பெண்களுக்கான கழிவறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
அவர் குற்றம் புரிவதைக் காட்டும் 52 வினாடி காணொளி எடுக்கப்பட்டது.
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 23 வயது முகம்மது அல் அமின் சிலாமாட்டுக்கு பத்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
சிறுமியைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக 27 வயது ராடென் ஸுல்ஹுஸ்னி ஸுல்கிஃப்லி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் குற்றச்சாட்டை மறுத்து வழக்கு கோரியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தின்போது அச்சிறுமி மறுப்பு தெரிவித்தபோதிலும் அந்த ஆடவர்கள் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த மறுநாள், தமக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி தமது தோழியிடமும் 28 வயது சகோதரரிடமும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்.
அதே நாளன்று இஸ்னாலியைச் சிறுமியின் சகோதரரும் தோழியின் கணவரும் பூங்காவில் அடித்துப் போட்டனர்.

