மோட்டார்சைக்கிளோட்டி மீது சிற்றுந்து மோதி மரணம் விளைவித்தவருக்கு நான்கு மாதச் சிறை

மோட்டார்சைக்கிளோட்டி மீது சிற்றுந்து மோதி மரணம் விளைவித்தவருக்கு நான்கு மாதச் சிறை

1 mins read
7393ba88-e381-4ea6-ba52-7b90a503fc4f
கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி மோட்டர் சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணம் ஏற்பட காரணமாக இருந்த 41 வயது முகமது ஹைருல்சாத் சாலே. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீவு விரைவுச்சாலையில் சிற்றுந்தைக் கவனக்குறைவாக ஓட்டி மோட்டர்சைக்கிளோட்டிமீது மோதிய ஓட்டுநருக்கு வியாழக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

உயிரிழந்த 57 வயதான மோட்டர்சைக்கிளோட்டியின் பெயர் சத்யதேவ் ராமானுஜ்.

தன்மீது சுமத்தப்பட்ட கவனமில்லாமல் வாகனமோட்டிய குற்றச்சாட்டை 41 வயது முகமது ஹைருல்சாத் சாலே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, எட்டு ஆண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ ஹைருல்சாத்துக்குத் தகுதியில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தக் குற்றத்தை ஹைருல்சாத் 2021ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி புரிந்ததாகவும் அப்போது அவர் ‘அரோரா வெர்ல்டு’ எனும் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்ததாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்