போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்த ஆடவருக்குச் சிறைத்தண்டனை

போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்த ஆடவருக்குச் சிறைத்தண்டனை

1 mins read
4e9c73e1-83ce-4589-afa8-acbeb54892b3
கஞ்சா உட்கொண்டது, ‘ஏ’ வகை போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை ஹார்ட்டிங் சிட்டி ஹெரல்டு ஐவன் ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கஞ்சாவுடன் தொடர்புடைய போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்த குற்றத்துக்காகவும் கஞ்சா உட்கொண்டதற்காகவும் ஆடவர் ஒருவருக்கு ஓராண்டு, இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் வைத்திருந்த மின்சிகரெட், மரினா ஒன் ரெசிடன்சஸ் கூட்டுரிமைக் குடியிருப்பில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

அங்குதான் அமெரிக்கரான 36 வயது ஹார்ட்டிங் சிட்டி ஹெரல்டு ஐவன் வசித்து வந்தார்.

கஞ்சா உட்கொண்டது, ‘ஏ’ வகை போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பளிக்கப்பட்டபோது போதைப்பொருளுடன் தொடர்புடைய மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து ஹார்ட்டிங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட பொட்டலம் ஒன்றை 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதியன்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

அதே நாள் மாலை 5.50 மணி அளவில் ஹார்ட்டிங்கின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டை அவர்கள் கண்டெடுத்தனர்.

ஹார்ட்டிங்கின் சிறுநீரைப் பரிசோதித்ததில் அவர் கஞ்சா உட்கொண்டது வெளிச்சத்துக்கு வந்தது.

மனவுளைச்சல் ஏற்படும்போதெல்லாம் அந்த மின்சிகரெட்டைத் தான் புகைத்ததாக ஹார்ட்டிங் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்மின்சிகரெட்சிறை