கத்தியைக் காட்டி மிரட்டியவருக்குச் சிறை, பிரம்படி

கத்தியைக் காட்டி மிரட்டியவருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
e6134572-3680-4fe8-b319-2cb23a91eda4
அம‌ஷிரோ 6.5 சென்டிமீட்டர் நீளக் கத்தியை வைத்திருந்தார். - படம்: நீதிமன்ற ஆவணங்கள்

அடுக்குமாடிக் குடியிருப்பிற்குக் கீழிருந்த கடை ஒன்றில் ஆடவர் ஒருவர் திடீரென கத்தியைக் காட்டி அங்கிருந்தவரை பயமுறுத்தினார்.

யோஜி அம‌ஷிரோ, 30, என்ற அந்த ஆடவர் தம்மைக் கைதுசெய்ய வந்த காவல்துறை அதிகாரியையும் கடித்தார்.

புதன்கிழமை நடந்த நீதிமன்ற விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒப்புக்கொண்டார்.

அம‌ஷிரோவுக்கு ஓராண்டு மற்றும் 120 நாள்கள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சிங்கப்பூரரான அம‌ஷிரோ மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணிவாக்கில் புவாங்கோக் லிங்கில் குற்றச்செயலை செய்தார்.

அம‌ஷிரோ 6.5 சென்டிமீட்டர் நீளக் கத்தியை வைத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்