ஸ்கூட் விமானத்தில் திருடியவருக்குச் சிறை

ஸ்கூட் விமானத்தில் திருடியவருக்குச் சிறை

1 mins read
2b05b763-5aaf-4294-a145-c7019bb43318
செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 28) சீன நாட்டவரான 50 வயது ரென் பின், தன் மீதான திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவுக்குச் சென்ற ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் மற்றொரு பயணியிடமிருந்து $750 ரொக்கம், மூன்று வங்கி அட்டைகளைத் திருடினார்.

இக்குற்றச்செயல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 28) சீன நாட்டவரான 50 வயது ரென் பின், தன் மீதான திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விழிப்புடன் இருந்த விமானச் சிப்பந்தி ரென் திருடுவதைப் பார்த்து விமானியிடம் தெரிவித்தார்.

விமானம் தரையிறங்கியதும் இந்தோனீசிய அதிகாரிகள் அதில் ஏறி, திருடப்பட்ட பொருள்கள் இருந்த கருப்பு பிளாஸ்டிக் பையை மீட்டனர். பின்னர், ரென்னையும் பாதிக்கப்பட்டவரையும் விமானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

அந்த பிளாஸ்டிக் பையை பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தனர்.

விமானம் ஜகார்த்தாவில் தரையிறங்கியதும் ரென் மீண்டும் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்