கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில், இரவு விடுதியில் பணிபுரிந்த பெண் ஒருவர் தகவல் தளங்களில் மின்சிகரெட்டுகள்ள, அவை தொடர்பான உதிரிப்பாகங்களை விற்க முடிவு செய்தார்.
அவர் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் இதுதொடர்பான விளம்பரங்களைச் செய்தார். மேலும் வாடிக்கையாளர்களே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவோ அல்லது டெலிவரி சேவைகள் மூலமாகவோ மின்சிகரெட்டுகளை அனுப்ப ஏற்பாடு செய்தார்.
செவ்வாய்க்கிழமையன்று (மே 5), 26 வயது அடிலெய்ட் ஆங் ருய் யான், நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு ஓர் ஆண்டு, ஏழு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவை மின்சிகரெட் தயாரிப்புகளின் விற்பனை, மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் பயன்பாடு, கடையில் திருடியது மற்றும் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு மீதான விதிமுறைகளை மீறியது ஆகியவை தொடர்பானவையாகும்.
தண்டனை விதிக்கப்பட்டபோது மேலும் 21 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
ஆங், இரவு விடுதியில் வேலை செய்தபோது வாடிக்கையாளர்கள் மின்சிகரெட்டுகள் பயன்படுத்துவதைக் கவனித்ததாகவும் இது அவரை அவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள தூண்டியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. அப்போது அவருக்கு 21 வயது.
மின்சிகரெட்டுகளுக்கான பணத்தை அவர் பேநவ் மூலம் வசூலித்தார்.

