தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆபாசமாக நடந்துகொண்ட துணைப்பாட ஆசிரியருக்குச் சிறை

1 mins read
ef5603fe-cc35-49e9-aadc-22480035918e
துணைப்பாட வகுப்புகளுக்கு வரும் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட 58 வயது மைக்கல் மார்டின் லீ டெக் ஹெங்கிடம் நூற்றுக்கணக்கான ஆபாச காணொளிகள் காணப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீட்டில் நடத்தப்பட்ட துணைப்பாட வகுப்புகளின்போது மாணவிகளின் பின்னால் நின்று ஆபாசமாக நடந்துகொண்ட தனியார் துறை ஆசிரியருக்கு நான்கு ஆண்டுகள் ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மானபங்கம் செய்தது, அபாச காணொளிகளை உருவாக்கியது போன்ற குற்றங்களையும் 58 வயது மைக்கல் மார்டின் லீ டெக் ஹெங் ஒப்புக்கொண்டார்.

லீயின் கைப்பேசியில் கண்டெடுக்கப்பட்ட 400க்கும் அதிகமான காணொளிகளில் ஆடவர் மாணவிகளை தகாத முறையில் தொடுவது பதிவாகியுள்ளது.

அந்தக் காணொளிகள் 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரை 31 தனித்தனி சம்பவங்களின்போது படமெடுக்கப்பட்டவை.

அதே ஆண்டு மே மாதம் லீ பொது இடங்களில் அபாச முறையில் நடந்துகொள்வதைத் தாமே காணொளியாகப் பதிவுசெய்தார்.

அதே காலகட்டத்தில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்த லீ, மாணவிகளின் பின்புறத்திலிருந்து தகாத முறையில் நடந்துகொள்வதையும் காணொளியில் பதிவுசெய்தார்.

அதில் ஐவர் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் 13லிருந்து 16 வயதுக்கு உட்பட்டோர் என்றும் வழக்கறிஞர் கூறினார்.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவ்காங்கில் உள்ள வீட்டில் லீ தகாத முறையில் நடந்துகொண்டதன் தொடர்பில் பெண் ஒருவர் காவல்துறையை அழைத்தார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான ஆபாச காணொளிகள் லீயின் கணினியில் காணப்பட்டன.

குறிப்புச் சொற்கள்