தாம் பணிபுரிந்த பள்ளியில் ஆசிரியர்களின் பாவாடைக்குள் காணொளி எடுத்த தகவல் தொழில்நுட்ப ஆதரவுத் தொழில்நுட்பருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
30 வயது சான் டிங் ஜியே, குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வியாழக்கிழமையன்று (ஜூன் 5) அவருக்கு 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் அடையாளத்தைக் காக்க, வழக்குடன் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சானின் தகாத செயலால் நான்கு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆசிரியர் ஒருவர் மற்றொருவருடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டும் காணொளிகளை சான் தமது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்தார்.
அந்தக் காணொளிகள் அவருக்கு எப்படி கிடைத்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
மின்தூக்கி ஒன்றில் 19 வயது சிறுமியின் பாவாடைக்குள் சான் காணொளி எடுக்க முயன்றபோது அவரது தகாத செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
அச்சிறுமி காவல்துறையினரை அழைத்தார்.
காவல்துறையினர் சான்னைக் கைது செய்தனர்.
ஆசிரியர்களை அவர் முறையற்ற வகையில் எடுத்த காணொளிகள் அவரது கைப்பேசியில் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

