$89,000 திருடிய பெண்ணுக்கு சிறை

$89,000 திருடிய பெண்ணுக்கு சிறை

1 mins read
06d8e6db-bbc0-4cd2-a174-03b197ae9a73
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நூராபெசா ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் சொத்து மேலாளரான நூராபெசா முகம்மது ரஃபி கூட்டுரிமை வீடுகளில் உள்ள குடியிருப்பாளர்கள் கொடுத்த 89,000 வெள்ளி கட்டணத்தைச் திருடியுள்ளார்.

அவர்மீதான குற்றம் புதன்கிழமையன்று நிரூபிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 37 வயது நூராபெசாவுக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நூராபெசா ‘எம்சிஎஸ்டிஎஸ்’ நிர்வாகத்திற்கும் அதன்கீழ் உள்ள குடியிருப்பாளர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் செய்யும் பணியில் இருந்தபோது இந்தக் குற்றத்தைச் செய்தார்.

எடுத்துக்கொண்ட பணத்தில் தனக்கான சம்பளம், கூட்டுரிமை வீட்டில் நடந்த பணிகளுக்கான செலவுகள், மற்ற ஊழியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தியாக நூராபெசாவின் தரப்பு தெரிவித்தது.

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடையே பணத்தை நூராபெசா எடுத்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நூராபெசா ஒப்புக்கொண்டார். இதற்கு நூராபெசா, 2011ஆம் ஆண்டு மோசடி, தாக்குதல் மூலம் காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
குற்றம்நிதி மோசடிசிறை