ஜாலான் புக்கிட் மேராவில் ஜனவரி 24ஆம் தேதி ஒரு டாக்சியும் ஏழு கார்களும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் நடந்த இத்தகைய இரண்டாவது விபத்து இது.
நியூ பிரிட்ஜ் ரோட்டை நோக்கிச் செல்லும் ஜாலான் புக்கிட் மேராவில் நடந்த விபத்து குறித்து மாலை 5.25 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
டாக்சி ஓட்டுநரான 56 வயது ஆடவரும் காரில் பயணம் செய்த பயணிகள் இருவரும் நினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அது சொன்னது.
விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.
முன்னதாக, ஜனவரி 24ஆம் தேதி காலை 9.40 மணியளவில் புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள், லாரி உட்படப் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நடந்தது.