ஜூவல் சாங்கி கடைத்தொகுதியில் வலுவடையும் வர்த்தகம்

ஜூவல் சாங்கி கடைத்தொகுதியில் வலுவடையும் வர்த்தகம்

27 Feb 2023 - 5:24 pm

1 mins read

ஜூவல் சாங்கி கடைத்தொகுதியில் வர்த்தகம் வலுவடைய தொடங்கியுள்ளது. அக்கடைத் தொகுதிக்கு அதிகமானோர் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், அனைத்துலக பயணத்துறை மீண்டெழ தொடங்கியுள்ளது.

சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று கிட்டத்தட்ட 345,000 பேர் ஜூவல் சாங்கி கடைத்தொகுதிக்கு வருகையளித்தனர். கொவிட்-19 தொற்று சிங்கப்பூரில் பரவத் தொடங்கியதிலிருந்து இதுவே ஆக அதிக எண்ணிக்கை. தொற்று பரவுவதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை நாள்தோறும் 300,000 ஆக இருந்தது.