வேலை மாறும் போக்கு சென்ற ஆண்டு குறைந்தது

வேலை மாறும் போக்கு சென்ற ஆண்டு குறைந்தது

1 mins read
9e14965b-482d-45de-a07e-8b69662fee47
சென்ற ஆண்டு குறைவான ஊழியர்கள் வேலை மாறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர் ஊழியர்களிடையே வேலை மாறும் போக்கு குறைந்துள்ளது. வேலை மாறியோர் விகிதம் ஆறு ஆண்டுகளில் சென்ற ஆண்டு ஆகக் குறைவாகப் பதிவானது.

14.7 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலை மாறினர். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகியிருக்கும் ஆகக் குறைவான விகிதம் இது.

இறுக்கமான தொழிலாளர் சந்தை இருந்தும், வலுவிழந்திருக்கும் பொருளியல் சூழல் காரணமாக, புதிய வேலை கிடைக்கும் சாத்தியம் குறைந்துள்ளது.

வேலை மாற்றத்தில் ஏற்பட்ட சரிவு, அனைத்துத் தொழில்துறைகளிலும் அனைத்து வயதுப் பிரிவினரிடையிலும் காணமுடிந்ததாக மனிதவள அமைச்சின் கருத்தாய்வு ஒன்று குறிப்பிட்டது.

25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து அடிக்கடி முதலாளிகளை மாற்றினர்.

இந்தப் பிரிவினரில் கிட்டத்தட்ட 13.9 விழுக்காட்டினர் 2023 ஜூன் மாதம் வரையிலான 12 மாதங்களில் வேலை மாறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒப்புநோக்க அந்தக் காலகட்டத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஊழியர்களில் 5.5 விழுக்காட்டினரும், அறுபது வயதுக்கும் மேற்பட்ட ஊழியர்களில் 3.7 விழுக்காட்டினரும் வேலை மாறினர்.

சென்ற ஆண்டு வேலை மாறியவர்களின் எண்ணிக்கை அனைத்துத் தொழில்துறைகளிலும் இறங்கியது.

இருப்பினும், தகவல், தொடர்பு, நிர்வாக, உதவிச் சேவைகள் போன்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக வேலை மாறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காட்டு ஊழியர்கள் தங்களின் தற்போதைய வேலைகளில் குறைந்தது ஐந்தாண்டுகள் இருந்ததாகவும் கருத்தாய்வில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்