ஜோகூர் பாரு சோதனைச்சாவடி-உட்லண்ட்ஸ் பேருந்துச் சேவை அதிகாலை 4.50 தொடங்கும்

1 mins read
8a4a88f0-1715-4e6f-b8ae-83d69835ccbe
காலை நேரத்தில் ஜோகூர் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை எதிர்கொள்ள பேருந்துச் சேவை தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து வாரநாள்களில் ஜோகூர் பாரு சோதனைச்சாவடியிலிருந்து உட்லண்ட்ஸ் செல்லும் பேருந்துச் சேவை தற்போதைவிட இன்னும் விரைவாக அதிகாலை 4.50 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் ஜோகூர் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை எதிர்கொள்ள இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் பேருந்து எண் 950 இதில் அடங்கும். இதை எஸ்எம்ஆர்டி இயக்குகிறது.

பேருந்து எண் 160, 170, 170X ஆகிய பேருந்துச் சேவைகளும் அதிகாலை 4.50 மணிக்குத் தொடங்கும். இவற்றை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்குகிறது.

தற்போது இப்பேருந்துச் சேவைகள், வாரநாள்களில் அதிகாலை 5 மணிக்குத் தொடங்குகின்றன.

செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து பொது விடுமுறை நாள்களிலும் வாரயிறுதிகளிலும் இப்பேருந்துச் சேவைகள் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும்.

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் இடையிலான இப்பேருந்துச் சேவைகளை அதிகாலை 4 மணிக்குத் தொடங்க மலேசியாவின் நிலப் போக்குவரத்து அமைப்பு கேட்டுக்கொண்டதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டதை அடுத்து, இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பேருந்துச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து இக்கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாகச் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்