‌ஜூ சியாட்டில் ஷிபுயா பாணி சாலைக் கடப்புக்கு வரவேற்பு

‌ஜூ சியாட்டில் ஷிபுயா பாணி சாலைக் கடப்புக்கு வரவேற்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2026 - 10:36 am

1 mins read

ஜப்பான் தலைநகர் தோக்கியோவின் ‌ஷிபுயா பகுதியில் உள்ள மாபெரும் சாலைக் கடப்பைப் போல ஜூ சியாட்டில் ஒரு சாலைக் கடப்பை உருவாக்கத் திட்டமிடப்படுகிறது.

அத்தகைய சாலைக் கடப்பு முறை ஜூ சியாட்டில் தற்போது சோதனையிடப்பட்டுவருகிறது. அந்த சாலைக் கடப்பை அவ்வட்டாரக் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொதுவாக இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதையே ஆரம்பக்கட்ட அறிகுறிகள் காட்டுகின்றன,” என்று மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ பெய் மிங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சாலைஜப்பான்வரவேற்பு