சிங்கப்பூரின் 60ம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜோயாலுக்காஸ் நகைக்கடை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் சில சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 60 கிராம் தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் எடையுள்ள 22 காரட் ‘எஸ்ஜி60’ சிறப்புத் தங்க நாணயம் இலவசமாகக் கிடைக்கும்.
அனைத்து வைர, தங்க நகைகளுக்கும் 9% ஜிஎஸ்டி சேவை கட்டணம் வசூலிக்கப்படாது.
“இந்த சிறப்புச் சலுகைகளுடன் ‘எஸ்ஜி60’ கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழி சிங்கப்பூருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார் ஜோயாலுக்காஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் பால் ஆலுக்காஸ்.
இந்தச் சிறப்பு ‘எஸ்ஜி60’ சலுகைகளை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஜோயாலுக்காஸ் காட்சிக் கூடங்களுக்குச் சென்று பார்வையிடலாம்.