தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாதனின் திருத்தப்படாத குறுஞ்செய்திகளை வழங்க நீதிபதி மறுப்பு

2 mins read
aa7c380f-6698-48b7-b211-75a1b4671c58
புதன்கிழமை (அக்டோபர் 23) பிற்பகல் அரசு நீதிமன்றத்திற்குள் செல்லும் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் யுதிஷ்த்ரா நாதன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் யுதிஷ்த்ரா நாதனின் திருத்தப்படாதக் குறுஞ்செய்தி தொகுப்பைப் பெறுவதற்காக தற்காப்பு வழக்கறிஞர்களின் வேண்டுகோளை நீதிபதி லியூக் டான் நிராகரித்தார்.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தொடர்பில் புதன்கிழமையன்று (அக்டோபர் 23) நீதிமன்றத்தில் மீண்டும் தொடர்ந்த வழக்கில் தமது முடிவை விளக்கிய நீதிபதி டான், அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்த பின்னர் அந்தக் குறுஞ்செய்திகளும் திரு சிங் நிரபராதியா குற்றவாளியா என்ற கேள்விக்கும் சம்பந்தமில்லை என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறினார்.

அந்தக் குறுஞ்செய்திகள், அரசுத் தரப்பின் வாதத்திற்குப் பாதகமாகவோ தற்காப்புத் தரப்பின் வாதத்திற்குச் சாதகமாகவோ இல்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணைக்காக அந்த குறுஞ்செய்தி நீக்கங்கள் குறிப்பாகச் செய்யப்பட்டதால், எத்தனை குறுஞ்செய்திகள் நீக்கப்பட்டன என்பதும் எதற்காக நீக்கப்பட்டன என்பதும் தற்போதைய குற்றவியல் விசாரணையுடன் தொடர்பற்ற விவகாரங்கள் என்றார் நீதிபதி.

மற்ற சாட்சிகளைப் போன்று, திரு நாதனின் நம்பகத்தன்மையும் விவகாரமானது என்பதில் ஐயமில்லை என்றாலும் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களான அந்தக் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தி, சாட்சிகள் கொடுக்கும் ஆதாரங்களின் துல்லியத்தைச் சோதிக்க முடியும் என்றும் நீதிபதி கூறினார்.

2021 நவம்பரில் திரு நாதன் சில குறுஞ்செய்திகளை நீக்கவிட்டு எஞ்சியிருந்ததை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவினரிடம் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றத்திற்குத் தெரிந்தே அவை நீக்கம் செய்யப்பட்டதுடன் நீக்கப்பட்ட குறுஞ்செய்திகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

திரு நாதனின் சாட்சியத்தில் நம்பகத்தன்மை உள்ளதா என்பதை நீக்கப்பட்ட குறுஞ்செய்திகள் காட்டக்கூடும் என்று தற்காப்பு வழக்கறிஞர் ஜுமபோய் கூறினார்.

எனவே, திரு நாதன் நீக்கிய குறுஞ்செய்திகள் உட்பட நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அவரது குறுஞ்செய்திகளின் பிரதியைத் திரு ஜுமபோய் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 21) கேட்டிருந்தார்.

திருத்தப்பட்ட குறுஞ்செய்தித் தொகுப்பும் திருத்தப்படாத குறுஞ்செய்தித் தொகுப்பும் திரு நாதன், திருவாட்டி லோ ஆகியோரின் சாட்சியங்கள் நம்பகத்தன்மைமிக்கதா என்பதைக் காண்பிக்கும் என்று திரு ஜுமபோய் திங்கட்கிழமை வாதிட்டார்.

இதற்கிடையே, பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

குறிப்புச் சொற்கள்