‘ஏஐ’ கணிப்பைவிட சற்று குறைந்து ஜூன் மாத ஏற்றுமதி 20.7% ஏற்றம்

‘ஏஐ’ கணிப்பைவிட சற்று குறைந்து ஜூன் மாத ஏற்றுமதி 20.7% ஏற்றம்

2 mins read
1f31faaf-8818-4787-891b-fc6f509aae92
சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் கொள்கலன் முனையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 20.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.

மின்னியல் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து உயர்வது அதன் காரணம் என்று அறியப்படுகிறது. இருப்பினும் மே மாதம் எட்டிய 38.4 விழுக்காடு ஏற்றத்தைவிட இது சற்று மிதமான வளர்ச்சியே.

அதேவேளை பொருளியல் நிபுணர்கள் புளூம்பர்க் நிதி, வர்த்தக ஊடகத்துடன் இணைந்து கணித்த 28.7 விழுக்காட்டு வளர்ச்சியையும் ஜூன் மாத எண்ணிக்கை எட்டத் தவறியது.

எனினும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் முதலீடுகளை ஈர்த்து, மின்னியல் சாதனங்களின் தேவை அதிகரித்து, எதிர்கால எண்ணெய் சாரா ஏற்றுமதி பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்,

இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் எண்ணெய் சாரா ஏற்றுமதி மிகவும் சிறப்பாக இருந்ததை டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளியல் அதிகாரி சுவா ஹான் டெங் சுட்டிக்காட்டினார்.

ஆண்டுகளுக்கு இடையிலான விகிதத்தில் அது 27.4 விழுக்காடு விரிவடைந்ததாக அவர் குறிப்பிட்டார். அதே காலகட்டத்தில் 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் வலுவான வளர்ச்சி என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி மிதமடைந்திருந்தாலும் முழு ஆண்டின் வளர்ச்சி தொடரும் என்று ஒசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் அதிகாரியான செலினா லிங் கருத்துரைத்தார்.

ஏனெனில் அவரது வங்கி கணித்துள்ள முழு ஆண்டுக்கான ஒட்டுமொத்த 6 விழுக்காட்டு வளர்ச்சி முதல் பாதியில் ஏற்பட்டுள்ள மிகச் சிறந்த விகிதங்களின் விளைவாக நிகழும் என்று அவர் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

உலகளாவிய நிதி நிறுவனமான ஜப்பானின் நொமுரா குழுமத்தின் ஆசியான் வட்டாரப் பொருளியல் தலைவர் இயுபன் பரகுவெலஸ், பொதுவாகப் பொருளியல் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தங்கமும் மருத்துவப் பொருள்களுமே முக்கியக் காரணம் என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஏற்றுமதிபொருளியல்நிபுணர்ஆசியான்வளர்ச்சிஏற்றம்சிங்கப்பூர்