தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூன் மாத கவிமாலையில்‘எனக்குப் பிடித்த கண்ணதாசன்’

1 mins read
முனைவர் மன்னை க.இராஜகோபாலனின் சிறப்புரை
7178dc25-c06b-4176-9afc-101b39358a64
கவிமாலையின் 301வது சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 28) மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தின் 5ஆம் தளத்தில் உள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறவிருக்கிறது. - படம்: பிக்சாபே

சிங்கப்பூரில் உள்ள கவிஞர்களுடனும் கவிதை ஆர்வலர்களுடனும் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில் மாதாந்திரச் சந்திப்பை நடத்தி வருகிறது. 

கவிமாலையின் 301வது சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 28) மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தின் 5ஆம் தளத்தில் உள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறவிருக்கிறது.    கவிமாலையின் இம்மாதச் சிறப்பு அங்கமாக ‘எனக்குப் பிடித்த கண்ணதாசன்’ என்ற தலைப்பில் முனைவர் மன்னை க.இராஜகோபாலனின் சிறப்புரை இடம்பெறும். நிகழ்ச்சியைக் கவிஞர் இளம்பரிதி வழிநடத்துகிறார்.

‘எனக்குப் பிடித்த கண்ணதாசன்’ கவிதை பகிர்வு அங்கம், ‘அப்பா’ என்ற தலைப்பில் இந்த மாதம் நடைபெற்ற கவிதை எழுதும் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கவிதைகளை வாசிக்கும் அங்கம், பரிசளிப்பு போன்ற வழக்கமான கவிமாலை அம்சங்களும் நிகழ்ச்சியின்போது இடம்பெறும்.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்