ஜூரோங் சென்ட்ரலில் களமிறங்கும் கலா மாணிக்கம்

ஜூரோங் சென்ட்ரலில் களமிறங்கும் கலா மாணிக்கம்

1 mins read
b9063d01-e8ea-44d6-9e72-78f3ef80c8f7
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் கலா மாணிக்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புதிதாக உருவாக்கப்பட்ட ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியும் மோதுகின்றன.

மசெக சார்பாகத் திரு ஸி யோ குவான், 40, களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் கலா மாணிக்கம், 52 போட்டியிடுகிறார்.

கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜூரோங் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் திரு ஸி. அதன் பின்னர் அவர் ஜூரோங் சென்ட்ரல் பகுதிக்குப் பொறுப்புவகித்தார்.

முன்னதாகத் திருவாட்டி கலா ஜாலான் காயூவில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உதவும் நோக்கில் அங்கு அவர் போட்டியிடவில்லை.

திருவாட்டி கலா கடந்த பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்காக நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.

குறிப்புச் சொற்கள்