தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூரியசக்தி, மின்கலத் தொழில்நுட்பத்தில் கைகோக்கும் கெப்பல், ஹுவாவெய்

1 mins read
09fa37c5-48bb-4802-990b-f7856788589d
திட்டங்களில் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க நிறுவனங்கள் முயல்கின்றன. - படம்: பிக்ஸபேய்

கெப்பல் நிறுவனத்தின் உள்கட்டமைப்புப் பிரிவும் சீனாவின் ஹுவாவெய் அனைத்துலக தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து சூரியசக்தி ஒளிமின்னழுத்திக் (பிவி) கட்டமைப்புகளையும் பேட்டரி எரிசக்தி சேகரிப்புக் (பெஸ்) கட்டமைப்பு தொழில்நுட்பத்தையும்  உருவாக்கவிருக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடையிலான எரிசக்திக் கட்டமைப்புகளுக்காக அவை உருவாக்கப்படுகின்றன.

இரு நிறுவனங்களும் குறைந்த கரிம தரவு நிலையங்களுக்கும் தொழிற்பூங்காக்களுக்குமான பிவி, பெஸ் தீர்வுகளைக் கண்டறிய இணைந்து பணியாற்றவிருக்கின்றன. அது தொடர்பான இணக்கக் குறிப்பில் கெப்பல் நிறுவனமும் ஹுவாவெய் நிறுவனமும் செவ்வாய்க்கிழமை (மே 13) கையெழுத்திட்டன.

திட்டங்களின் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கவும் செயல்பாட்டு நிலையை உறுதிப்படுத்தவும் அவ்வாறு செய்யப்படுவதாக நிறுவனங்கள் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.

செயல்பாடுகள் தொடங்கும்போது சாங்கியில் உள்ள கெப்பலின் செயல்பாட்டு மைய நிலையத்துடன் திட்டங்கள் இணைக்கப்படும். 

இரு நிறுவனங்களும் எரிசக்தி தேவையையும் விநியோகத்தை சமநிலைப்படுத்த உதவும் கட்டமைப்பை உருவாக்கவும் ஒத்துழைக்கின்றன.

இந்தப் பங்காளித்தவம் மூலம் ஹுவாவெய்யின் மின்னிலக்க எரிசக்தி தொழில்நுட்பங்களையும் எரிசக்தி உள்கட்டமைப்பில் உள்ள கெப்பலின் ஆழமான நிபுணத்துவத்தையும் பயன்படுத்த முடியும் என்று கெப்பல் உள்கட்டமைப்புப் பிரிவின் தலைமை நிர்வாகி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்