உலகளாவிய சொத்து நிறுவனமான கெப்பல் $100 பில்லியன் நிர்வாகத்தின்கீழான இடைக்கால நிதி இலக்கை அதற்கான காலக்கெடுவுக்கு முன்னதாகவே எட்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டில் இதுவரை, தனது சொத்துச் சந்தை, உள்கட்டமைப்பு, தொடர்புத் தனியார் நிதி ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படும் நிதியில் ஏறத்தாழ $13.5 பில்லியனை அந்தக் குழுமம் சேர்த்துள்ளது.
உலகளாவிய வரையறுக்கப்பட்ட பங்காளிகளிடமிருந்து பெறப்பட்ட $7.8 பில்லியன் தோராய மதிப்பிலான புதிய மூலதனக் கடப்பாடுகளால் இந்த வளர்ச்சியை அது எட்டியது.
பலதரப்பட்ட தனியார் நிதி மற்றும் வாகனங்கள், கெப்பலின் இரண்டாம் கல்விச் சொத்து நிதி போன்றவை வரை அத்தகைய புதிய மூலதனக் கடப்பாடுகள் நீடிப்பதாக கெப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தெரிவித்தது.
நிதி நிலவரம் மேம்பட்டிருப்பது குறித்து கெப்பல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோ சிங் ஹுவா விளக்கினார்.
“கெப்பல் நிர்வகிக்கும் சொத்துகளின் மதிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அது சொத்து நிர்வாக வருவாயையும் நடைமுறை வருவாயையும் விரிவுபடுத்தும் ஒரு உந்துசக்தியை உருவாக்குகிறது,” என்றார் அவர்.
“கெப்பலின் தனியார் உள்கட்டமைப்பு உத்திகள், இதுவரை $7.7 பில்லியன் பங்கு முதலீட்டுக் கடப்பாடுகளைப் பெற்றுள்ளன. இது, $22 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பில் வளர்ச்சி கண்டுவரும் கையப்படுத்துவதற்கான திட்டங்களைத் தொடர ஒரு வலுவான மூலதனத் தொகுப்பை வழங்குகிறது,” என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

