2026 முற்பாதியில் கெப்பலின் ஒட்டுமொத்த நிகர லாபம் சரிவு

2026 முற்பாதியில் கெப்பலின் ஒட்டுமொத்த நிகர லாபம் சரிவு

1 mins read
b99c3408-9dbb-41a1-8f3c-a53d84e51038
2028க்குள் வருடாந்தரச் செலவுகளை 70 மில்லியன் வெள்ளி குறைக்கவும் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்கால ஒருங்கிணைப்புக்கு ஏற்றவாறு தயார்படுத்தவும் கெப்பல் நிறுவனம் தற்போது எம்1 நிறுவனத்தை முழுமையாக மறுசீரமைத்து வருகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எம்1 நிறுவனத்தின் முறிந்த விற்பனை ஒப்பந்தத்தால் ஏற்பட்ட இழப்புகள், பழைய பொருள்களின் மதிப்பிழப்பு ஆகியவற்றின் காரணமாக, 2026 முற்பாதியில் கெப்பல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் சரிவைக் கண்டது.

2028க்குள் வருடாந்தரச் செலவுகளை 70 மில்லியன் வெள்ளி குறைக்கவும் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்கால ஒருங்கிணைப்புக்கு ஏற்றவாறு தயார்படுத்தவும் கெப்பல் நிறுவனம் தற்போது எம்1 நிறுவனத்தை முழுமையாக மறுசீரமைத்து வருகிறது.

இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு 4 மில்லியன் வெள்ளி சேமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் 2026 இறுதிக்குள் வருடாந்தரச் சேமிப்பை 10 மில்லியன் வெள்ளிக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற நிறுவனக் கூட்டம் ஒன்றில் கெப்பல் தலைமை நிர்வாகி லோ சின் ஹுவா தெரிவித்தார்.

எம்1 நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வர்த்தகத்தை ‘சிம்பா டெலிகோம்’ நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் வெள்ளிக்கு விற்கும் ஒப்பந்தத்தின் இறுதி நிலையை கெப்பல் எட்டியிருந்தது.

இருப்பினும், சிம்பா நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான ‘துவாஸ் லிமிடெட்’, எம்1 பங்குகளை வாங்குவதற்கான விற்பனை, கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக மே மாதம் அறிவித்ததை அடுத்து, அந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து தகுந்த நேரத்தில் உரிய ஒப்புதல்களைப் பெறத் தவறியதே அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டதற்குக் காரணம் என்று கெப்பல் நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
எம்1கெப்பல்ஒப்பந்தம்