வேலையிடப் பாகுபாட்டைச் சமாளிக்க முக்கிய மசோதா நிறைவேற்றம்

2 mins read
0d6d9c7e-12f1-4e1a-affb-2b00e3a01592
வேலையிடப் பாகுபாட்டை சமாளிக்கும் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலையிடப் பாகுபாட்டைக் கையாளும் முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதன்கிழமை (ஜனவரி 8) அன்று நிறைவேற்றப்பட்ட வேலையிட நியாயத்தன்மை சட்டத்தை பாகுபாடு இன்றி ஆளும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளான பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி உறுப்பினர்கள் ஒரு மனதாக ஆதரித்தனர்.

இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், ஒரே இரவில் அனைத்துப் பிரச்சினைகளையும் அரசாங்கத்தால் தீர்த்துவிட முடியாது என்றார்.

காலப்போக்கில் தொடர்ந்து பணியாற்றி அது மேம்படுத்தப்படும் என்றார் அவர்.

மசோதாவுக்கான விவேகமான அணுகுமுறை தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

புதிய பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் என்று அழைக்கப்படுவது எளிதாக இருந்தாலும், சரியான சமநிலையுடன் மசோதாவை வடிவமைப்பது ‘சிக்கலானது மற்றும் சவாலானது’ என்று அவர் குறிப்பிட்டார்.

பாட்டாளிக் கட்சி உறுப்பினர் சில்வியா லிம், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் ஆகியோரின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இந்த மசோதாவை நிறைவேற்ற ஏன் அரசாங்கம் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது என்று அவர்கள் வினவினர்.

“நாங்கள் ஒரு சமநிலையான அணுகுமுறையை பின்பற்ற விரும்பினோம். சிங்கப்பூரில் வர்த்தகங்கள் செயல்பட முடியாமல் போனால் தொழிலாளர்களின் வேலை பாதிக்கப்படும்.

“தற்போதைய வேலையிட விதிமுறைகளை கட்டிக்காப்பதுடன், வேலையிடங்களும் சமூகமும் பிளவுபடாமல் ஒரு சமநிலையான மசோதாவை உருவாக்க அரசாங்கம் பரவலாக ஆலோசனைகளை மேற்கொண்டது,” என்று திரு டான் தெரிவித்தார்.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளரான இங் சீ மெங், “பல ஆண்டுகளாக, வயது, பாலினம் மற்றும் பிஎம்இ என்று குறிப்பிடப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் போன்றோர் உட்பட பணியிடப் பாகுபாட்டைச் சமாளிக்க வலுவான முயற்சிகளை தொழிற்சங்கம் எடுத்தது என்றார்.

குறிப்புச் சொற்கள்