மெக்ரிட்சியில் கருநாகத்திற்கும் மலைப்பாம்புக்கும் இடையே மோதல்

1 mins read
e6f398e4-186a-4159-b217-10c6bd9fd724
திரு மேசன் எடுத்த புகைப்படத்தில், மலைப்பாம்பு கருநாகத்தைச் சுற்றி நெரிக்க முயற்சி செய்ததைக் காணமுடிந்தது.  - படம்: சாம் மேசன்

சிங்கப்பூரின் ‘மெக்ரிட்சி பெத்தாய் ட்ரெயில்’லில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை 5 மணிவாக்கில் ஆஸ்திரேலியர் சாம் மேசன் நடந்துகொண்டிருந்தபோது, தம் கண்முன்னால் இரண்டு பாம்புகள் சண்டையிட்டதைக் கண்டார்.

கருநாகம் ஒன்றுக்கும் மலைப்பாம்பு ஒன்றுக்கும் இடையே கடும் சண்டை.

திரு மேசன் எடுத்த புகைப்படத்தில், மலைப்பாம்பு கருநாகத்தைச் சுற்றி நெரிக்க முயற்சி செய்ததைக் காணமுடிந்தது.

அவரது துணைவியார் ஜூலி மேசன் அந்தப் புகைப்படத்தையும் காணொளியையும் ‘சிங்கப்பூர் வைல்டுலைஃப் சைட்டிங்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

“இதுவரை பதிவான ஆகப் பெரிய கருநாகம் 5.8 மீட்டர் நீளம் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த ராஜநாகமும் கிட்டத்தட்ட அந்த நீளத்தில் இருக்கக்கூடும் என்று என் கணவர் நினைக்கிறார்,” என்று திருவாட்டி மேசன் இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டார்.

காணொளியில் இடம்பெற்ற காட்சியைக் கண்ட இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்தனர். சண்டையில் எந்தப் பாம்பு வெற்றிபெற்றிருக்கக்கூடும் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்