தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீடுகள், பசுமைச்சூழலுடன் புத்துயிர் பெறுகிறது கிராஞ்சி

2 mins read
895eeab1-8816-4a5a-90a5-325c738528c7
கிராஞ்சி பகுதியைச் சுற்றிலும் இயற்கை வளம் நிறைந்த வசதிகள் அமைக்கப்படும். அதில் ஒன்று ரெய்ன்போரஸ்ட் வைல்டு ஏஷியா வனவிலங்குப் பூங்கா. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

கிராஞ்சி வட்டாரம் வருங்காலத்தில் புத்துயிர் பெற உள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாக, கிராஞ்சி என்று சொன்னாலே நமக்கு குதிரைப் பந்தயம்தான் நினைவுக்கு வரும். காலப்போக்கில் குதிரைப் பந்தயம் மீதான மோகம் குறைந்துவிட்டதால் அதற்கான நிலப்பகுதி சரிவரப் பயன்படுத்தப்படவில்லை.

எனவே, நாம் அந்த நிலத்தை மீட்டு அதற்குப் புதிய வாழ்வைக் கொடுக்க உள்ளோம். அது பரந்து விரிந்த பெரிய பகுதி.

கிட்டத்தட்ட 130 ஹெக்டர் பரப்பளவு உள்ள அந்த நிலப்பகுதி 200 காற்பந்துத் திடலுக்குச் சமமானது.  மாபெரும் உருமாற்றத்திற்குக் கிடைத்திருக்கும் அரியதொரு வாய்ப்பு அது.

முதற்கட்டமாக, அந்த வட்டாரத்திற்கான  பயணத்தொடர்பை மேம்படுத்த உள்ளோம்.

உட்லண்ட்ஸ் பகுதியில் ஏற்கெனவே வடக்கு-தெற்கு, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் என இரு எம்ஆர்டி சேவைகள் உள்ளன. 

அவற்றுடன், இனி சுங்கை காடுட்டில் புதிய எம்ஆர்டி நிலையத்தை கட்ட உள்ளோம். அந்நிலையம், வடக்கு-தெற்கு மற்றும் டௌன்டவுன் ஆகிய எம்ஆர்டி சேவைகளின் சந்திப்பு நிலையமாக இருக்கும்.

அந்தப் பகுதியைச் சுற்றிலும் இயற்கை வளம் நிறைந்த வசதிகள் அமைக்கப்படும். அந்த வட்டாரத்தின் வடக்கே புதிய மண்டாய் சதுப்பு நிலம் மற்றும் இயற்கைப் பூங்கா, தெற்கே மண்டாய் வனவிலங்குக் காப்பகம் ஆகியன இருக்கும். மேலும், ரயில் பசுமைப் பாதை, சுங்கை மண்டாய் ஆறு ஆகியன உள்ளன.

போதுமான இடம், போக்குவரத்துத் தொடர்பு, இயற்கைவளம் போன்றவற்றால் கிராஞ்சி நிலப் பகுதி செழிப்படையும். எனவே, புதிய பொது வீடமைப்புப் பேட்டையை அங்கு உருவாக்குவோம்.

பிடாடாரி புதிய நகரத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக 14,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நில வசதி அங்கு உள்ளது.

அந்த வீடுகள் பசுமை வட்டாரங்களால் சூழப்பட்டு இருக்கும். கிராஞ்சி எம்ஆர்டி நிலையத்தைச் சுற்றி புதிதாக உருவாக்கப்படும் அக்கம்பக்க நிலையம் உள்ளிட்ட அதிகமான வசதிகளும் அடுத்த பத்தாண்டு காலத்தில் அங்கு ஏற்படுத்தப்படும். 

குறிப்புச் சொற்கள்