குடிமக்கள் செய்தித் தளமான ‘ஸ்டாம்ப்’, தனது 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு கோரிக்கையை பொதுத்தளத்தில் வைத்துள்ளது.
பலதரப்பட்ட உணர்வுகளைத் தூண்டும் விதாக பரபரப்பு, சோகம், உற்சாகம் என பல்வகைச் செய்திகளையும் அதன் தளத்தில் அது அன்றாடும் வெளியிட்டு வருகிறது.
அதேவேளையில் மனிதநேயம், கருணை போன்ற நற்குணங்களைக் காட்டும் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும்படி அதன் தளத்தில் அவற்றைப் பதிவேற்றம் செய்வோருக்கு ஸ்டாம்ப் வேண்டுகொள் விடுத்துள்ளது.
பிறரைக் குறைகூறுவதற்கு மட்டுமல்லாமல், உதவிக்கரம் நீட்டுவோரைப் பாராட்டுவதற்கும் இத்தளம் பயன்பட வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது. நிதி நெருக்கடியில் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவுவது, விபத்தில் சிக்கியோரை மீட்பது, பதற்றமான சூழல்களைத் தணிப்பது போன்ற துணிச்சலான நற்செயல்களைப் பகிர்வதை என ஸ்டாம்ப் ஊக்குவிக்கிறது.
‘நன்மைக்கான ஸ்டாம்ப்’ எனும் கருப்பொருளின்கீழ், அக்கம்பக்கப் பூசல்கள், இணையத்தில் வேகமாகப் பரவும் நிகழ்வுகள், உள்ளூர்ச் செய்திகள் ஆகியவற்றுடன் அன்றாட நாயகர்களின் கதைகளையும் சிங்கப்பூரர்கள் பகிரலாம்.
இந்த மைல்கல்லைச் சிறப்பிக்கும் விதமாக, சிங்கப்பூர் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளாகப் பகிரப்பட்ட செய்திகளைத் திரும்பிப் பார்க்கும் சிறப்பு இணையப்பக்கத்தை ஸ்டாம்ப் தொடங்கியுள்ளது.
பயனர்களின் கருத்துகளுக்கேற்ப அடக்கமான புதிய வடிவமைப்பு, ஆக அண்மைச் செய்திகளைத் தரும் ‘ஜஸ்ட் இன்’ பகுதி, சமூக ஊடக உள்ளடக்கங்களுக்கான காணொளிப் பிரிவு, பரிசுப் போட்டிகளுக்கான தனிப் பக்கம் ஆகியவையும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தலைப்புச் செய்திகளுக்கு அப்பால் மனிதர்களின் அனுபவங்களை ஆழமாக ஆராயும் ஆறு புதிய தொடர்களையும் ‘ஸ்டாம்ப்’ வெளியிடுகிறது. சமூக நோக்கத்துடன் மக்களை மையப்படுத்திய இத்தொடர்கள், செய்திகளுக்குப் பின்னால் உள்ள மனிதர்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் நோக்கம் கொண்டவை.
ஸ்டாம்ப் கடந்த 2006ல் தொடங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டில் த நியூ பேப்பர் ஆங்கில இதழுடன் இணைக்கப்பட்டது.
