தொழிலாளர் தின விடுமுறை: சோதனைச் சாவடிகளில் வாரஇறுதி நெரிசல்

தொழிலாளர் தின விடுமுறை: சோதனைச் சாவடிகளில் வாரஇறுதி நெரிசல்

2 mins read
புனித வெள்ளிக்கிழமை வார இறுதியில்,1.4 மில்லியன் பயணிகள் இரு நிலச் சாவடிகளையும் கடந்து ஜோகூர் கடந்து சென்றனர்
ed59c14a-6e45-48d0-bae7-1b9612935a93
நெரிசல் இல்லாத நேரங்களில் திட்டமிட்டு பயணம் செய்யும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். - படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெள்ளிக்கிழமை (மே1) தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஏப்ரல் 30) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 3) வரையிலான வார இறுதி நாள்கள் உட்பட ஜோகூர் செல்லும் இரு நிலச் சோதனைச் சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது என குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தெரிவித்தது.

அந்தக் காலகட்டத்தில் ஜோகூர் செல்வோர், நெரிசல் இல்லாத நேரங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிகாலை அல்லது மாலை நேரங்களில் நெரிசல் சற்று குறையலாம் என்று குறிப்பிடப்பட்டது.

பயணிகள் ‘கியூஆர் கோட்’ முறையைப் பயன்படுத்தி, குடிநுழைவுச் சாவடியை விரைவாக கடந்து செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

போக்குவரத்து சீராகச் செல்ல பாதுகாப்பு கருதி, விதிமுறைகளைக் கடைப்பிடித்து, சாலைத் தடங்களில் அத்துமீறாமல் முறையாக வாகனங்களைச் செலுத்தி, அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தடங்களை மீறி மற்ற வாகனங்களை முறையின்றி முந்திச் செல்வது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் அதனை தவிர்க்கவும், அவ்வாறு விதிமீறுவோர், மீண்டும் பின்வரிசையில் இருந்து வர நேரிடும் எனவும் ஆணையம் எச்சரித்தது.

அதிகாரிகளுடன் ஒத்துழைக்காமல் போக்குவரத்து விதிகளை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் நினைவூட்டியது.

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, புனித வெள்ளிக்கிழமை விடுமுறையும் வாரஇறுதியும் இணைந்து வந்தபோது, போக்குவரத்து குற்றங்களுக்காக 18 வாகனவோட்டிகள் பிடிபட்டனர் என்று ஆணையம் தெரிவித்தது.

அச்சமயத்தில் 1.4 மில்லியன் பயணிகள் இரு நிலச் சாவடிகளையும் கடந்து ஜோகூர் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்