‘சீ’ விளையாட்டுகளில் பங்கேற்கும் சிங்கப்பூர் அணிக்கு லாரன்ஸ் லியாவ் தலைவர்

1 mins read
2af35a6a-26da-4160-835d-75391dee0862
33வது ‘சீ’ விளையாட்டுகளில் திரு லாரன்ஸ் லியாவ் (வலமிருந்து 2வது) சிங்கப்பூர் அணியின் தலைவராக வழிநடத்துவார். திரு இங் எங் சூன் (இடக்கோடி), திருமதி வாங் ஷாவோ இங் (இடமிருந்து 2வது), திரு சாமுவேல் காங் (வலக்கோடி) ஆகியோர் அணியின் உதவித் தலைவர்களாகச் செயல்படுவார்கள். - படம்: சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம்

தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் 33வது தென்கிழக்காசிய (சீ) விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணியை வழிநடத்த, சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் (எஸ்என்ஓசி), திரு லாரன்ஸ் லியாவை அணித் தலைவராக நியமித்துள்ளது.

மரியாதைக்குரிய விளையாட்டுத் தலைவரும் அனுபவம் வாய்ந்த நிர்வாகியுமான திரு லியாவ், வட்டார ரீதியில் போட்டியிடும் சிங்கப்பூர் அணியை வழிநடத்துவார். மேலும் விளையாட்டுப் போட்டிகள் முழுவதிலும் சிங்கப்பூர் அணி நன்கு தயார்நிலையில் இருப்பதை திரு லியாவ் உறுதி செய்வார்.

இந்தப் பணியில் அவருக்குத் துணையாக திரு இங் எங் சூன், திருமதி வாங் ஷாவோ இங், திரு சேமுவல் காங் ஆகியோர் இருப்பார்கள். இவர்கள் உதவித் தலைவர்களாகப் பணியாற்றுவார்கள். அவர்கள் அனைவரும் விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுவதுடன் ஆதரவு நல்குவார்கள். இதன் மூலம் சிங்கப்பூர் அணிக்கு நேர்மறையான, உயர் செயல்திறன் கொண்ட சூழலை அவர்கள் உருவாக்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

48 விளையாட்டுகளில் 900க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிடும் இந்த விளையாட்டுப் போட்டிக்கு, சிங்கப்பூர் அணி இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அணியை அனுப்ப உள்ளது.

சிங்கப்பூர் அணி குறித்த கூடுதல் விவரங்கள் விளையாட்டுப் போட்டிகள் நெருங்கும் சமயத்தில் அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்