முறைகேடான நடத்தை தொடர்பாகப் ‘புரோப்நெக்ஸ்’ கிளை நிறுவனமான ‘புரோப்நெக்ஸ் ரியல்டி’க்கும் இணை எதிர்வாதிகள் இருவருக்கும் எதிரான வழக்கு கைவிடப்பட்டதாக அந்தச் சொத்துச் சந்தைச் சேவைக்குழுமம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தைக்கான நிதி அறிக்கை ஒன்றில் அந்நிறுவனம், இந்தத் தகவலை வெளியிட்டது.
சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டதாகப் புரோப்நெக்ஸ், கடந்த ஆண்டு பிப்ரவரி 11ல் தெரிவித்தது.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவரது அறிவரையால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கோரி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ததாகப் புரோப்நெக்ஸ் தெரிவித்தது.
வழக்குப் பதிவுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ள எண்ணிய நிறுவனம், இந்த முடிவை நீதிமன்றத்திடம் தெரிவித்தது.
தற்போது, வழக்கு தொடுத்தவரே அந்த வழக்கைக் கைவிட்டதாகப் புரோப்நெக்ஸ் தெரிவித்துள்ளது. வழக்குப் பற்றிய கூடுதல் விவரங்களை அது வெளியிடவில்லை.
இந்த வழக்கால் எந்தப் பெரும் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் குழுமத்தின் பணித்தரத்தை மதிப்படுவதற்கான காலகட்டமான நிதியாண்டு, 2025 டிசம்பர் 31ல் முடிவடைந்ததாக அது குறிப்பிட்டது.
அக்டோபர் 2025ல், புரோப்நெக்ஸ் ரியல்ட்டிக்கு எதிராக $849, 287 மதிப்பிலான மற்றொரு வழக்கும் கைவிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
‘99-to-1’ முறையைக் கொண்டு வாங்கிய சொத்துகளுக்கான, கூடுதல் வாடிக்கையாளர் முத்திரை வரியை (ABSD) குறைக்க புரோப்நெக்சும் மற்றொரு தரப்பும் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

