‘எஸ்ஆர்சி’யின் பில்லியர்ட்ஸ் அறை தொடர்பில் வழக்கு

‘எஸ்ஆர்சி’யின் பில்லியர்ட்ஸ் அறை தொடர்பில் வழக்கு

1 mins read
f2a96928-1611-4e66-a555-f01c37f89c33
சிங்கப்பூர்ப் பொழுதுபோக்கு மன்றம் (எஸ்ஆர்சி). - படம்: எஸ்ஆர்சி / லிங்க்ட்இன்
Google News Preferred Icon

சிங்கப்பூர்ப் பொழுதுபோக்கு மன்றத்தில் (எஸ்ஆர்சி) உள்ள பில்லியர்ட்ஸ் விளையாட்டு அறையைக் கூட்டு வேலைப் பகுதியாக (co-working space) மாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கு எதிராக பில்லியர்ட்ஸ் பகுதி உறுப்பினர்கள் இருவர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடுத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்துக்கு நீதிமன்ற வழக்கின் மூலம் தீர்வுகாண உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) அனுமதி அளித்துள்ளார்.

பில்லியர்ட்ஸ் அறையை மாற்றியமைக்க வகைசெய்யும் தீர்மானத்தை எஸ்ஆர்சி உறுப்பினர்கள் நிறைவேற்றியிருந்தனர். அந்தத் தீர்மானம் செல்லுபடியாகாது என்று எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.

‌ஷோன் கெர்வின் மேத்தியூஸ், மு யீ ‌ஷியோங் ஆகியோர் எஸ்ஆர்சிமீதும் அதன் நிர்வாகக் குழுமீதும் வழக்கு தொடுத்தனர். தீர்மானம், மன்றத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் நிறைவேற்றப்பட்டது என்பது அவர்களின் வாதம்.

தீர்மானத்துக்குக்குச் சாதகமாகப் போதுமானோர் வாக்களிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

எஸ்ஆர்சி, கிட்டத்தட்ட 700 உறுப்பினர்களைக் கொண்ட சமூக, பொழுதுபோக்கு மன்றமாகும். அதன் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள பில்லியர்ட்ஸ் அறையை தரைமட்டத்திற்குக் கீழேயுள்ள இரண்டாம் தளத்துக்கு மாற்றி இரண்டாம் தளத்தில் கூட்டு வேலைப் பகுதியை அமைப்பதற்கான திட்டத்துக்கு மன்ற உறுப்பினர்கள் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தனர். அந்த உருமாற்றத் திட்டத்தின் மதிப்பு ஏறத்தாழ 16.6 மில்லியன் வெள்ளியாகும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வழக்குவிளையாட்டுஉயர் நீதிமன்றம்