காவல்துறை அதிகாரியை வசைபாடிய வழக்கறிஞருக்கு அபராதம்

1 mins read
46905a02-1f9d-4151-838f-d0cff6495388
டோனி டான் சூன் யோங்கிற்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: இணையம்

ஸூக் இரவுவிடுதிக்கு வெளியே காவல்துறை அதிகாரியை வசை பாடிய வழக்கறிஞருக்கு நவம்பர் மாதம் 6ஆம் தேதியன்று $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதியன்று அதிகாலை ரிவர் வேலி சாலையில் உள்ள ஸூக் இரவுவிடுதிக்குச் சிங்கப்பூரரான 41 வயது டோனி டான் சூன் யோங் சென்றிருந்தார்.

இரவுவிடுதியில் ஒருவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த ஆடவரின் முகத்தில் டான் இருமுறை குத்தினார்.

அவர்களை விலக்கிவிட முயன்ற பாதுகாவல் அதிகாரி ஒருவரின் கன்னத்திலும் டான் குத்தினார்.

இதையடுத்து, இரவுவிடுதிக்கு வெளியே மற்ற பாதுகாவல் அதிகாரிகளுடன் இம்மூவரும் காவல்துறை அதிகாரிகளுக்குத் காத்துக்கொண்டிருந்தனர்.

காவல்துறை அதிகாரிகள் அவ்விடத்தை அடைந்தபோது டானுடன் அவரது நண்பரும் காதலியும் இருந்தனர்.

டானிடமிருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் பெற முயன்றபோது அவரை டான் வசை பாடினார்.

சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இது பதிவானது.

அப்போது டான் குடிபோதையில் இருந்ததாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

டானைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இரவுவிடுதியில் நிகழ்ந்த கைகலப்பில் டானின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்ததாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்