வழக்கறிஞர்கள் நேர்மையாக இருக்கவேண்டும்: எட்வின் டோங்

வழக்கறிஞர்கள் நேர்மையாக இருக்கவேண்டும்: எட்வின் டோங்

2 mins read
e1adb281-1c2e-4989-8279-24b4b3ad3c5d
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் புது மாணவர்களை வரவேற்க நடைபெற்ற விழாவில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உள்ள வழக்கறிஞர்கள் தங்கள் நற்குணத்தின் அடிப்படையில் மதிப்பிடவேண்டும். தங்கள் கட்சிக்காரர்களிடம் மட்டுமல்ல நீதிமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் பொறுப்புள்ளவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) புது மாணவர்களை வரவேற்க நடைபெற்ற விழாவில் பேசிய டோங், சட்டம் என்பது நம்பிக்கையில் அடங்கியிருக்கிறது என்றார்.

“நீங்கள் ஒரு வீட்டை வாங்கும்போது வழக்கறிஞரிடம் செல்கிறீர்கள். வீட்டின்மீதான உங்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்று நம்புகிறீர்கள். ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அதற்கு மதிப்புண்டு என்று நம்புகிறீர்கள். நீதிமன்றத்துக்குள் செல்லும்போது அனைவரும் நியாயமான முறையில் விசாரிக்கப்படுவர் என்று நம்புகிறீர்கள்,” என்றார் டோங்.

சிரமமான சூழ்நிலைகளிலும் வழக்கறிஞர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் ஆதரவு இல்லாத சூழலிலும் சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் கூறிய டோங், கட்சிக்காரரின் நலனுக்கு உகந்தல் தோன்றினாலும் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தக் கூடாது என்றார்.

தமது உரையில், மாணவர்கள் தங்கள் நான்கு ஆண்டு படிப்பின் மூலம் எவ்வாறு சிறந்த பலனை அடையலாம் என்பதற்கான வழிகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

இது ஒருபோதும் எளிதான தொழிலாக இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், அதிலுள்ள பொறுப்புகள் மிகக் கடுமையானவை என்றார்.

“அந்த இலக்கை நீங்கள் கண்டறிந்ததும் உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும். நீண்ட வேலை நேரம் உங்களை விட்டு மறைந்துவிடாது. சவாலான வழக்குகள் எளிதாகிவிடாது. ஆனால், இந்த வேலை ஏன் முக்கியமானது என்பதை அப்போதுதான் நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள். ஒரு காலத்தில் தியாகங்களாகத் தோன்றியவை, சேவையாக உணரத் தொடங்கும்; அந்த உணர்வுதான் பல வழக்கறிஞர்களை நீண்ட, நிறைவான பணியை நோக்கி அழைத்துச் செல்கிறது என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
வழக்கறிஞர்நேர்மைமாணவர்கள்