செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் லாசரஸ் தீவு டைனி அவே விடுதிகள்

செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் லாசரஸ் தீவு டைனி அவே விடுதிகள்

1 mins read
737d49f5-f870-4db7-b7ab-473174b617cf
லாசரஸ் தீவுக்குச் சுற்றுப்பயணிகளை ஈர்க்க டைனி அவே எஸ்கேப் விடுதிகள் கட்டப்பட்டன. - படம்: பிக் டைனி

லாசரஸ் தீவில் செயல்பட்டுவந்த டைனி அவே எஸ்கேப் (Tiny Away Escape) என்ற தங்குவிடுதிகள் 2027 பிப்ரவரி மாதம் அதன் கதவுகளை நிரந்தரமாக மூடவிருப்பதாக அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மார்ச் 27ஆம் தேதி தங்குவிடுதியை நடத்தும் பிக் டைனி (Big Tiny) நிறுவனம் அதுகுறித்து ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் தெரிவித்தது.

லாசரஸ் தீவில் உள்ள தங்குவிடுதிகளுக்கான முன்பதிவுகள் ஜனவரி 31ஆம் தேதிவரை திறந்திருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

இறுதி அத்தியாயத்தை அடைந்துள்ள தங்குவிடுதிகளில் தங்கியிருந்து கடற்கரையோரம் அமைதியாக நடந்து, அமைதியான காலைப் பொழுதுகளை அனுபவிக்க இன்னும் நேரம் இருப்பதாகப் பதிவில் எழுதியிருந்தது.

தங்குவிடுதிகளை மூடுவதற்கான காரணங்கள் அந்தப் பதிவில் குறிப்பிடவில்லை.

பிக் டைனி நிறுவனம் லாசரஸ் தீவில் ஐந்து தங்குவிடுதிகளை அமைத்துள்ளது.

அவை 139 சதுர அடியிலிருந்து 167 சதுர அடி அளவுடையவை.

ஓர் இரவு அதில் தங்குவதற்கான கட்டணம் $284லிருந்து தொடங்குகிறது.

2023ஆம் ஆண்டு மே மாதம் செயல்பாடுகளைத் தொடங்கிய தங்குவிடுதிகள் லாசரஸ் தீவில் குறுகிய காலத்துக்குத் தங்கும் அனுபவத்தைத் தந்தன.

லாசரஸ் தீவைச் சுற்றுலாத் தளமாக மாற்றும் நோக்கில் தங்குவிடுதிகள் அங்கு அமைக்கப்பட்டன.

சூரியசக்தியால் இயங்கும் அந்த விடுதிகள் நீடித்த நிலைத்தன்மையான பொருள்களால் உருவாக்கப்பட்டவை.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்