வேலை மோசடி: $17.6 மில்லியன் இழப்பு; 1,000க்கும் அதிகமானோர் ஏமாற்றம்

1 mins read
4e8160c7-04b7-479b-a531-b3d6bc5ecb98
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வேலைத் தொடர்பான மோசடிகளில் ஏறக்குறைய 1,013 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் குறைந்தது 17.6 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ்சப், டெலிகிராம் போன்ற செயலிகள் வழி மோசடியாளர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு மோசடிச் செயல்களில் ஈடுபடுவதாகக் காவல்துறை எச்சரித்தது.

ஆய்வு ஒன்றுக்குக் கணக்கெடுப்பு (Survey) எடுப்பதுதான் வேலை என்று கூறி மக்களிடம் வேலை வாங்கிவிட்டு ஊதியம் தராமல் மோசடியாளர்கள் ஏமாற்றுகின்றனர்.

நூதனமுறையில் மக்கள் ஏமாறாமல் இருக்க ஸ்கேம்‌ஷீல்ட் செயலியையும், வங்கி மற்றும் சமூக ஊடக கணக்குகளை இரு முறை பாதுகாப்பு கட்டமைப்பு மூலம் வலுப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

வங்கி கணக்குகளில் பணம் மாற்றுவதற்கான ஒருநாள் வரம்பையும் மக்கள் நிரப்பி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

மோசடி தொடர்பான உதவிகளுக்கு www.scamalert.sg என்ற இணையப் பக்கத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்