அமெரிக்க நுண்ணுயிரியலாளருக்கு லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசு

அமெரிக்க நுண்ணுயிரியலாளருக்கு லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசு

2 mins read
f428398f-91ef-4d59-a4dc-13b22212e3b6
அமெரிக்க நுண்ணுயிரியலாளர் ஜொவேன் பிரே ரோஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அமெரிக்க நுண்ணுயிரியலாளரான 72 வயது ஜொவேன் பிரே ரோசுக்கு இவ்வாண்டின் லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசு வழங்கப்படுகிறது.

இவர் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நியூவாட்டர் போன்ற நீர் மறுபயன்பாட்டு அமைப்புகளின் தரத்தைப் பாதுகாக்கும் அணுகுமுறைக்கு முக்கிய முன்னோடியாகத் திகழ்ந்த இவர், சிங்கப்பூரிலும் உலகளவிலும் நீர் நிர்வாகத்தை வடிவமைத்தவர் ஆவார்.

உலகளாவிய நிலையில் நீர் தொடர்பான சவால்களைத் தீர்ப்பதில் இவரது சிறந்த பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் இவருக்கு இவ்விருது வழங்கப்படுவதாகப் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் (பியுபி) தலைமை நிர்வாகி ஓங் சீ சின், செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

1993ஆம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான மில்வாக்கியில் ஏற்பட்ட நோய்ப் பரவலும் இதில் அடங்கும். அதில் குறைந்தது 69 பேர் இறந்ததுடன் 400,000க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டனர்.

நோய்ப் பரவல்களுக்கு அந்த ஒட்டுண்ணியே காரணம் என்பதையும் போதுமான அளவு வடிகட்டப்படாத, கிருமி நீக்கம் செய்யப்படாத குடிநீர் விநியோகத்தின் காரணமாகவே இந்த நோய் பரவியது என்பதையும் பேராசிரியர் ரோஸ் முதன்முதலில் நிரூபித்தார்.

அந்த நேரத்தில், நீர்ப் பாதுகாப்பிற்கான சோதனைகள் தண்ணீரை உட்கொண்ட பிறகுதான் முடிவுகளை அளித்தன. மேலும், நுண்ணுயிர் அல்லாத நீர் மூலம் பரவும் அசுத்தங்களுக்கு எதிராக இவை குறைந்த அளவிலான பாதுகாப்பையே வழங்கின.

இந்த முக்கியமான இடைவெளியை நிரப்புவதற்காக, பேராசிரியர் ரோஸ் மற்றும் அவரது நண்பர்கள் அளவுசார் நுண்ணுயிர் அபாய மதிப்பீட்டிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தனர். இது நுண்ணுயிரிகளின் செறிவு, பரவும் பாதைகள் மற்றும் வீரியம் போன்ற காரணங்கள் மூலம் அபாயத்தை அளவிடும் ஒரு முறையாகும்.

2016ஆம் ஆண்டில், நீருக்கான நோபெல் பரிசு என்று சிலரால் கருதப்படும் ஸ்டாக்ஹோம் நீர் விருதும் மிக அண்மையில் 2024ஆம் ஆண்டின் அனைத்துலக நீர் சங்கத்தின் உலகளாவிய நீர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசைப் பெறும் 11வது நபரான பேராசிரியர் ரோஸ், விருதுச் சான்றிதழ் ஒன்றையும் தங்கப் பதக்கம் ஒன்றையும் $300,000 தொகையையும் பெறுவார்.

ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரம் 2026ன் அதிகாரபூர்வத் திறப்பு விழாவின்போது, சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் இந்தப் பதக்கத்தை பேராசிரியர் ரோசுக்கு வழங்குவார்.

குறிப்புச் சொற்கள்
நீர்விருதுநோய்ஆய்வு