லீ குவான் யூவின் பேனா ஏலம்; மதிப்பு $50,000 வரை

லீ குவான் யூவின் பேனா ஏலம்; மதிப்பு $50,000 வரை

1 of 2
படம்: ஹோட்லோட்ஸ்
படம்: ஹோட்லோட்ஸ்

05 Aug 2026 - 10:54 am

1 mins read

சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்குச் சொந்தமாக இருந்த மோன்ட்பிளாங்க் (Montblanc) பேனா ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது.

வெள்ளி நிறத்திலான இந்த ‘ஃபவுன்டன்’ பேனா திரு லீ, மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்துடன் தொடர்புடையதாகும். 31 ஆண்டுகள் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பு வகித்த பிறகு திரு லீ 1990லிருந்து 2004ஆம் ஆண்டுவரை மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

இதில் ‘SM Lee Kuan Yew’ (மூத்த அமைச்சர் லீ குவான் யூ) என்ற ஆங்கில வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன.

பேனாவின் மதிப்பு 30,000லிருந்து 50,000 வெள்ளிவரை இருக்கும் என்று உள்ளூர் ஏல நிறுவமான ஹோட்லோட்ஸ் கணித்துள்ளது. பேனாவை புக்கிட் மேராவில் உள்ள ஹோட்லோட்ஸ் செலரூம் வளாகத்தில் நேரில் காணலாம்.

பேனாவுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்கியது. இணையத்தில் இடம்பெறும் ஏலம் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவுறும்.

முன்னதாக 2003ஆம் ஆண்டு இந்தப் பேனா ‘லீ குவான் யூ குடும்பப் பொருள்கள்’ (The Lee Kuan Yew Family Collection) எனும் ஏலத்தில் விற்கப்பட்டது.

இப்போது அது மீண்டும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்லீ குவான் யூஏலம்விலை