பேரங்காடிகளில் நெகிழிப் பைக்காக வசூலிக்கப்படும் கட்டணம், அவற்றின் பயன்பாட்டைக் குறைத்துள்ளது.
இதனை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்துக்கு அளித்த எழுத்துவழி பதிலில் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு $100 மில்லியனுக்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் பேரங்காடிகள், ஒவ்வொரு நெகிழிப்பைக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து குறைந்தது 5 காசு விதிக்கும் திட்டம் 2023 ஜூலை மாதம் நடப்புக்கு வந்தது.
இத்திட்டம் அறிமுகமான முதல் ஆண்டில், கட்டணம் வசூலித்த பேரங்காடிகளில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நெகிழிப்பைகளின் எண்ணிக்கை 70 முதல் 80 விழுக்காடு வரை குறைந்தது என அமைச்சர் ஃபூ குறிப்பிட்டார்.
இருப்பினும், அத்திட்டத்தை அனைத்துச் சில்லறை விற்பனையாளர்களுக்கும் விரிவாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அவர் சொன்னார்.
ஆனாலும், சில கடைகள் தங்களது சொந்த முனைப்பால் நெகிழிப்பைக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளதாக அல்லது அவற்றை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.