சேவை தொடரும் என்று கடப்பாடு தெரிவித்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங்

சேவை தொடரும் என்று கடப்பாடு தெரிவித்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங்

1 mins read
612c3eca-f887-480a-89bc-146830b8952f
மே 29ஆம் தேதி நடந்த மக்கள் சந்திப்பின்போது பலரையும் பார்த்துப் பேச முடிந்ததாகக் கூறினார் திரு லீ. - படம்: லீ சியன் லூங் ஃபேஸ்புக்
multi-img1 of 2

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் மே 29ஆம் தேதி இரவு, மக்கள் சந்திப்பு நேரத்திற்குமுன் தெக் கீ தொகுதியைச் சேர்ந்த தம்முடைய குழுவினருடன் சந்தித்து உரையாடினார்.

மக்கள் சந்திப்பு நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் குடியிருப்பாளர்களது வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதிலும் தம் குழுவினர் கொண்டுள்ள கடப்பாட்டுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிலையில், தெக் கீ வட்டாரத்தை அனைவருக்கும் ஏற்றதொரு மேம்பட்ட இடமாக மாற்றி, தம் குழுவினருடன் வட்டாரவாசிகளுக்காகத் தொடர்ந்து சேவை புரிவதைத் தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக திரு லீ ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பின்போது பலரிடம் பேச வாய்ப்பு கிடைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்