கடந்த 2008 ஆம் ஆண்டு ஹெங் பூன் ஷாய் என்ற நபர் தமது 55 வயது உறவினரை கத்தியால் குத்திக் கொன்றார்.
மனநல பாதிப்பால் ஹெங் அவ்வாறு செய்தார் என்பதால் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை நிறைவேற்றியப் பிறகு ஹெங் பொங்கோலில் தமது தாயுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், 46 வயது ஹெங் 2021ஆம் ஆண்டு தமது அண்டை வீட்டுக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கதவில் சத்தம் வருவதாகக் கூறி அண்டை வீட்டுக்காரரான 46 வயது கிம் வீ மிங் ஹெங்கிடம் சண்டையிட்டார்.
2021 ஜூலை 14ஆம் தேதி பிற்பகலில் மதுபோதையில் இருந்த கிம், ஹெங்கை திட்டினார். அதன் பின்னர் கத்தியை எடுத்து வந்து ஹெங்கை கிம் மிரட்டினார்.
ஆத்திரமடைந்த ஹெங் கிம்மின் கத்தியாலே அவரைத் தாக்கி கொன்றார். அதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலை செய்த குற்றத்திற்காக ஹெங்குக்கு ஆயுள் தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.