சிங்கப்பூர் மக்களைக் குழப்பிய ‘ஒளிப்பந்து’க்கான விடை கிடைத்தது

2 mins read
fe1c0e64-4b5d-4f06-9c9c-ce9c543f8d64
செப்டம்பர் 19ஆம் தேதி டிக்டாக்கில் @sundayannab1 என்னும் பயனீட்டாளர் ஒளிப் பந்து தொடர்பாகக் காணொளி ஒன்றை முதலில் வெளியிட்டார். - படம்: டிக்டாக்

பாசிர் ரிஸ், தெம்பனிஸ், ஈசூன் உள்ளிட்ட வட்டாரங்களில் ஊதா நிறத்தில் ஓர் ஒளிப்பந்து ஆங்காங்கே தென்பட்டது. அதுதொடர்பான காணொளிகளும் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டன.

இது என்ன திடீரென ஓர் ஊதா பந்து சிங்கப்பூரில் தோன்றியுள்ளது என்று மக்களும் குழம்பினர். இந்நிலையில் இது யூடிரிப் (YouTrip) தள விளம்பரத்திற்காக செய்யப்பட்ட சம்பவங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 19ஆம் தேதி டிக்டாக்கில் @sundayannab1 என்னும் பயனீட்டாளர் ஒளிப் பந்து தொடர்பாகக் காணொளி ஒன்றை முதலில் வெளியிட்டார்.

பயனீட்டாளர் காரில் செல்லும்போது திடீரென ஓர் ஒளிப்பந்து சாலையைக் கடந்து சென்றது கண்டு அவர் அதிர்ந்தார்.

அந்தக் காணொளி 40,000க்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றது. 24,000க்கும் அதிகமாகப் பகிரப்பட்டது. மேலும் சில இடங்களில் ஒளிப்பந்து தெரிந்ததாகச் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், இணையவாசிகள் பலர் இது அறிவியல் சார்ந்தது, வானிலை சார்ந்தது எனத் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

சிங்கப்பூர் மக்களின் குழப்பத்திற்கு விடையளிக்கும் விதமாக யூடிரிப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல நாட்டு ரொக்கத்தை மாற்றச் செய்ய உதவும் பணப் பரிவர்த்தனை தளம்தான் யூடிரிப், தனது விளம்பரத்திற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

சிங்கப்பூரை மையமாகக் கொண்டு செயல்படும் யூடிரிப் புதன்கிழமை (செப்டம்பர் 24) முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

யூடிரிப் இதற்கு முன்னர் இதே போன்ற வித்தியாசமான விளம்பர நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்