காணாமல் போன 15 வயதுச் சிறுமி குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மகாலட்சுமி ரவிக்குமார் என்ற இந்தச் சிறுமி ஹவ்காங்கிலுள்ள போவன் உயர்நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில், புளோக் 3 லோரோங் நேப்பிரிக்கு அருகே மே 2ஆம் தேதி பிற்பகல் 3.40 மணிவாக்கில் கடைசியாகத் தென்பட்டதாகக் காவல்துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அவர் வெள்ளை நிற மேலாடையும் வெளிர்நீல நிற ஜீன்ஸ் கால்சட்டையும் அணிந்திருந்தார்.
இவரைப் பற்றி ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் 1800-255-0000 என்ற எண் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையப்பக்கம் வழியாகக் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.
அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும்.


