ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். தீபாவளிக்கு ஒரு மணிநேரம் முன் இப்படித்தான் இருந்தது லிட்டில் இந்தியா!
திரும்பும் இடமெல்லாம் அலைமோதிய கூட்டம். மக்களைக் கூவி கூவி அழைத்த கடைக்காரர்கள்! அறுசுவை உணவின் அபார வாசம்! கடைசி நிமிடத்தில் சூடுபிடித்த பலகார விற்பனை. தள்ளுபடி விலைகளில் பறந்த துணிமணிகள்!
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி உற்சாகத்தைத் தர தவறுவதே இல்லை லிட்டில் இந்தியா.
கேம்பல் லேன், சையது ஆல்வி சாலைக்கு எதிரில் உள்ள தீபாவளிச் சந்தை, பர்ச் ரோடு சந்தை எனத் திரும்பும் இடமெல்லாம் வண்ணக்கோலம்.
நள்ளிரவு அடித்ததுதான் தாமதம். ‘தீபாவளி வாழ்த்துகள்!’ என்று லிட்டில் இந்தியா முழுதும் எதிரொலித்தன மக்களின் சத்தம்.
ஆரவாரத்துடன் தீபாவளிச் சந்தை களைக்கட்டியது.
மத்தாப்பு ஒளியில் தீபாவளி உணர்வு லிட்டில் இந்தியாவில் கரைபுரண்டது.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு அழகு சேர்க்கும் அங்கங்கள் இந்தக் கனரக வாகன அணிவகுப்பும் ஒன்று.
சிராங்கூன் சாலை நெடுக மோட்டார்சைக்கிள், லாரிகள், கார்கள், கனரக வாகனங்கள் சரசரவென சென்றது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது
இனிதே தொடங்கிய தீபாவளிக் குதூகலம் இனியும் தொடரும். தமிழ் முரசின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!