கடன் முதலைத் தொல்லை விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 20ஆம் தேதியன்று ஈசூன் ஸ்திரீட் 22ல் உள்ள வீட்டிலும் நவம்பர் 21ஆம் தேதியன்று சாய் சீ சாலையில் உள்ள வீட்டிலும் தொல்லை விளைவிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை நவம்பர் 22ஆம் தேதியன்று கூறியது.
அந்த வீடுகளின் வாசல் கதவுகளிலும் கம்பிச் சட்டங்களிலும் சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டிருந்தது.
ஈசூனில் உள்ள வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சுவரிலும் சாய் சீ சாலையில் உள்ள வீட்டு வாசலுக்கு வெளியே உள்ள தரையிலும் கிறுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சிறுவர்மீது நவம்பர் 23ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்படும்.
கடன் முதலைத் தொல்லை தொடர்பான குற்றத்தை முதல்முறை புரிபவர்களுக்கு $5,000லிருந்து $50,000 வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.