கடன்முதலைத் தொல்லை விளைவித்த குற்றத்துக்காக 27 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈசூன் வட்டாரத்தில் உள்ள வீட்டின் வெளிப்புறச் சுவர் மீது அவர் பச்சை சாயம் தெளித்ததாகவும் கடனை அடைக்குமாறு வாசகம் ஒன்றைக் கொண்ட காகிதம் ஒன்றை வீட்டுக்கு வெளியே ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் மே மாதம் 31ஆம் தேதியன்று இரவு 7.35 மணி அளவில் ஈசூன் ஸ்திரீட் 21ல் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே நிகழ்ந்ததாக காவல்துறை கூறியது.
உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
காவல்துறைக் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் அவ்வட்டாரத்தைச் சேர்ந்தோரிடம் விசாரணை நடத்தியும் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரின் அடையாளத்தை அவர்கள் அடையாளம் கண்டனர்.
சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து திங்கட்கிழமையன்று (ஜூன் 23) அவர் கைது செய்யப்பட்டார்.