உள்ளூர் ‘பேட்டிசரி’ கடையான லூனா டிசம்பர் 31 மூடல்

உள்ளூர் ‘பேட்டிசரி’ கடையான லூனா டிசம்பர் 31 மூடல்

அதிகரிக்கும் செலவு காரணம்
படம்: danielfooddiary.com

30 Sep 2026 - 9:40 am

1 mins read

சிங்கப்பூரின் பிரபல ‘பேட்டிசரி’ (patisserie) வகை கேக் கடையான லூனா வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மூடப்படவுள்ளது.

செயல்பாட்டுச் செலவும் உணவுப் பொருள் செலவும் அதிகரிப்பது அதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கேக், டார்ட் வகை பிஸ்கட்டுகளை லூனா இணையத்தில் விற்றுவருகிறது. 111 சமர்செட் கட்டடத்தில் அமைந்துள்ள லூசின் பை லூனா என்ற அதன் நேரடிக் கடையிலும் அவை விற்கப்படுகின்றன.

அந்தக் கடை 2024ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. லூனாவின் மூடல் லூசின் கடையைப் பாதிக்காது என்று லூனா பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைட்சிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கடைவர்த்தகம்மின்வர்த்தகம்செலவு