உள்ளூர் ‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ குரங்கிற்குப் புதிய ஆண் குழந்தை

உள்ளூர் ‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ குரங்கிற்குப் புதிய ஆண் குழந்தை

1 mins read
89fb74e5-beb9-455f-b17f-7cab23707306
அந்தக் கைக்குழந்தை முதன்முதலில் பிப்ரவரி மாதத்தில் காணப்பட்டது. - படம்: திரு லோ ஜியா பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் மிக அருகிவரும் ‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ குரங்குகள், புதிய உறுப்பினரை வரவேற்றுள்ளன.

ஆண் குரங்குக் குட்டி ஒன்று பிறந்துள்ளது. இவ்வாண்டு காட்டுப்பகுதியில் காணப்பட்டுள்ள அந்த இனத்தைச் சேர்ந்த முதல் குரங்குக் குட்டி அது.

அந்தக் குரங்குக் குட்டி மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் முதன் முதலாக பிப்ரவரி 24ஆம் தேதி காணப்பட்டது. சில புகைப்படக்காரர்கள் முன்னதாக அதன் கர்ப்பமான தாயாரைக் கண்டிருந்தனர்.

அந்தக் குரங்குக் குட்டி அநேகமாக சென்ற டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி மாதத் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் பிறந்திருக்கலாம் என்று குரங்கின நிபுணர் டாக்டர் அண்டி ஆங் கூறினார்.

டாக்டர் ஆங் ‘ராஃபிள்ஸ் பேண்டட் லேங்கர்’ பணிக்குழுவை வழிநடத்துகிறார். அந்தப் பணிக்குழு, அவ்விலங்குகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை வழிநடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்
பாதுகாப்பு