‘ஆக்ஸ்ஃபர்ட்’ ஆங்கில அகராதியில் உள்ளூர் ‘சிங்லிஷ்’ சொற்கள் சேர்ப்பு

‘ஆக்ஸ்ஃபர்ட்’ ஆங்கில அகராதியில் உள்ளூர் ‘சிங்லிஷ்’ சொற்கள் சேர்ப்பு

இரட்டை பொருள்படவும் பயன்படும் சில சிங்லிஷ் சொற்கள், சிங்கப்பூரில் அதிக நாள் இருந்து ஆங்கிலம் பேசுவோருக்கு நன்றாகப் புரியும்
படம்: ஐஸ்டாக் கெட்டி இணையப் படம்

25 Mar 2026 - 4:46 pm

2 mins read

சிங்கப்பூரில் வாழும் கல இனத்தவர்களாலும் பயன்படுத்தப்படும் பல சிங்லிஷ் சொற்கள், ‘ஆக்ஸ்ஃபர்ட்’ ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளில் இயல்பாக பயன்படும் 11 வார்த்தைகள் அதன் அகராதியில் இணைக்கப்பட்டதாக ‘ஆக்ஸ்ஃபர்ட்’ புதன்கிழமை (மார்ச் 25) தெரிவித்தது.

பெயர்ச்சொல்லாகவும் பெயரடையாகவும் பயன்படும் ‘வாயாங்’, பெயரடையான ‘ஜியாலாட்’ போன்றவற்றுடன், ‘அஸாம் லக்ஸா’ (பெயர்ச்சொல்), ‘அகா அகா’ (பெயர் & வினைச்சொல்), ‘போலெ’ (வினைச்சொல்), ‘பிடிஓ’ (பெயர் & வினைச்சொல்), ‘டி கெஸட்’ (வினைச்சொல்) ‘ஐஸ் கச்சாங்’ (பெயரச்சொல்), ‘கேப்போ’ (பெயர் & வினைச்சொல், பெயரடை), ‘மாட் சாலே’ (பெயர் பெயரடை) ‘பிலே பிலே’ (பெயர்ச்சொல்), ‘வாயாங்’ (பெயர்ச்சொல், பெயரடை) ஆகிய மொத்தம் 11 சொற்கள் அந்த அகராதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இச்சொற்களில் சில இரட்டை பொருள்படவும் இங்கு பயன்படுகின்றன. உதாரணமாக ‘அகா அகா’ என்பது ஒருவகை உணவைக் குறிப்பது போல, ஏறத்தாழ என்ற அர்த்தத்திலும் பேசப்படுகிறது. அதைப்போல இந்தோனீசியாவிலும் மலேசியாவிலும் ‘வாயாங்’ தெருக்கூத்து என்று அர்த்தத்துடன் ஒருவர் நடிப்பதையும் சுட்டிக்காட்டப் பயன்படும்.

சிங்கப்பூரில் அதிக நாள் இருந்து ஆங்கிலம் பேசுவோருக்கு இவை நன்றாகப் புரியும்.

அகா அகா, ஐஸ் கச்சாங் போன்ற உணவுகளைப் போலவே காயா டோஸ்ட், நாசி லெம்மாக், கறி ஃபிஷ் ஹெட் ஆகியவை 2025ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டன. ஷியோக், லெபாக் போன்றவை 2016ஆம் ஆண்டில் அந்த அகராதியில் இணைந்தன.

மேற்கத்தியரை குறிப்பிட பயன்பட்ட அங்மோ போன்று, மாட் சலே என்ற சொல்லும் தற்போது அகராதியில் இவ்வாண்டு பட்டியலில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்