சாங்கி பொது மருத்துவமனை (சிஜிஎச்), செங்காங் பொது மருத்துவமனை(எஸ்கேஎச்) ஆகியவற்றின் அவசர மருத்துவப் பிரிவுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காத்திருக்கும் நேரமும் கூடியது.
அவசர மருத்துவப் பிரிவில் வழக்கத்திற்கு மாறாக காத்திருப்பு நேரம் கூடியுள்ளதாகவும் நோயாளிகளை சேர்க்க கூடுதல் நேரம் தேவைப்படும் என்றும் டான் டோக் செங் மருத்துவமனை அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது.
உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் மட்டுமே அவசர மருத்துவத்தை நாட வேண்டும் என்று சாங்கி பொது மருத்துவமனையும் செங்காங் பொது மருத்துவமனையும் மே 14ஆம் தேதி தனித்தனியாக வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தன.
இதனால் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளை மருத்துவ நிபுணர்கள் உடனடியாக கவனித்து அவசர மருத்துவம் அளிக்க முடியும்.
இருமல், தொண்டை எரிச்சல், மூக்கு ஒழுதல் உள்ளிட்ட மிதமானது முதல் நடுத்தர அறிகுறிகளைக் கொண்டவர்கள் பொது மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

